×

திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகரில் உடைந்த கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு

ஆவடி, டிச. 21: ஆவடி நகராட்சி 7வது வார்டு வெங்கடாசலம் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சாலையோரம், பல ஆண்டுகளுக்கு முன்பாக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் வழியாக மழைக்காலங்களில் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மழைநீர் புழல் ஏரிக்கு சென்று வந்தது.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக மழைநீர் கால்வாயில் அனைத்து பகுதியில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் இருந்தும் கழிவுநீர் விடப்பட்டதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் கழிவுநீர் கலந்து தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இந்நிலையில் வெங்கடாசலம் நகர் 2வது தெரு, செங்குன்றம் சாலையில் கால்வாய் உடைந்து சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். . இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக ஆவடி நகராட்சி அதிகாரிகள் கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று காலை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைந்த கால்வாய் தோண்டப்பட்டு, புதிய கால்வாய் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டது. இந்த கால்வாய் சீரமைப்பு நடவடிக்கையை உடனே மேற்கொண்ட ஆவடி நகராட்சி அதிகாரிகளுக்கும், அதற்கு துணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Tags : Thirumullaivilam Venkatachalam ,
× RELATED எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு...